வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

Oneiric Ocelot (ஒநேரிக் ஒகேலோட்) 11.10 -உபுண்டு லினக்ஸின் அட்டகாசமான புதிய பதிப்பு ...
நாட்டி நார்வாளுக்கு பிறகு உபுண்டு தனது அடுத்த பதிப்பிற்கான பணியில்  இறங்கியது , இதன் பெயர் ubuntu 11.10 Oneiric Ocelot ஆகும்.இம்மாதம் செப்டம்பர் 1 அன்று பீட்டா1-னை வெளியிட்டது அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்ததது, மொசில்லா நெருப்பு நரி 7 இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
படம்-1.எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட படம்.

படம்-2.எனது மடிக்கணினியில் live-ஆக பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட படம்.
உபுண்டு 11.10 ஆல்பா,பீட்டா மற்றும் இறுதி வெளியீடுகளின் விவரம்:

June 2, 2011அன்று ஆல்பா-1.
June 30,2011 அன்று  Alpha-2.
August 4,2011 அன்று ஆல்பா-3.
September1,2011 பீட்டா-1. 
September22,2011 பீட்டா-2.
Final release on October 24, 2011.வெள்ளி, செப்டம்பர் 09, 2011

லினக்ஸ் (உபுண்டு) பதிவர்களுக்கு ஒரு தகவல்...

உபுண்டு லினக்ஸ் பதிர்வார்களுக்கு வணக்கம்.
நாம் உபுண்டு லினக்ஸை வளர்ப்பதற்காகவும் அனைவரிடமும் கொண்டு செல்லவும் பல பதிவுகளை இரவு பகல் பாராது எழுதுகிறோம்.
அதனை பிற்பலப்படுத்த இண்ட்லி போன்ற திரட்டிகளிலும் இணக்கின்றோம். இண்ட்லி போன்ற மற்றும் ஒரு இணயதளம் உள்ளது இங்கே லினக்ஸ்-க்கு என லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க... என்ற பகுதி உள்ளது.  அதில் நாம் பதிவுளை இணைத்தால் இங்கு வரும் அனைவரும் லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.


 இணையதள முகவரி.   :    http://www.tamilthottam.in
இணயதளத்தின் பெயர் :  தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
ADMIN                                      :  யூஜின் புரூஸ்
மின்னஞ்சல்.                       : tamilparks@gmail.com


புதன், ஆகஸ்ட் 17, 2011

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு தகவல்....

         உபுண்டு நிறுவனம் 10.10  வரை உபுண்டு CD--யினை இலவசமாக வீட்டுக்கு அனுப்பியது தற்போது இந்த சேவையை நிறுத்திவிட்டது, இதனால் என் போன்ற லினக்ஸ் பயனாளர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

     எனது வலைபூவில் உபுண்டு சிடி இலவசமாக வீட்டுக்கு வர என்ற லிங்கை கிளிக் செய்து அந்த லிங்க் ERROR காட்டுகிறது என்று பொள்ளாச்சியில் இருந்து ஒரு நண்பர் (தேவராஜ்-8220713870) கைதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூறினார். நான் தரவிறக்கம் செய்யும் படி கூறினேன்.அதற்கு அவர் எனக்கு இணைய வேகம் குறைவு தரவிறக்கம் செய்வது முடியாத காரியம் நான் என்ன செய்வது என்று கேட்டார்.

அதற்கு நான்,

                            என்னிடம் உபுண்டு 10.10 iso கோப்பாக உள்ளது நான் உபுண்டு 10.10-ஐ சிடி-யில் ரைட் செய்து கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன் உங்கள் தெளிவான முகவரி மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் படி கூறினேன்.அவரும் தான் முகவரியை எனது கைதொலைபேசிக்கே அனுப்பி வைத்தார். நான் அவருக்கு உபுண்டு 10.10 சிடி ஒன்றை கூரியர் மூலம் அனுப்பி வைத்தேன்.


    உங்களுக்கும் லினக்ஸ் CD வீட்டுக்கு வர வேண்டுமா?  மேலும் விவரங்களுக்கு .......
 linuxsaravananlive@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். அல்லது +919578156727 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். 

புதன், மே 11, 2011

லினக்ஸ் மிண்ட் 11-KATYA பற்றிய தகவல்கள்.....

 
புண்டு 11.04 கடந்த மாதம் 28/04/2011 அன்று RELEASE ஆனது, அடுத்தது என்ன நமது லினக்ஸ் மிண்ட் 11 தான்.இதுவும் உபுண்டு 11.04‍ஐ போலதான் அட்டகாசமாக இருக்கும்.
இதன் RC-வெளியீடு இம்மாதம் 15‍-ஆம் தேதியிலும் இறுதி வெளியீடு இம்மாதம் கடைசி‍ 30‍-ஆம் தேதியிலும் வெளியிடப்படும்.

இதன் DESKTOP:

Gnome 2.32 DESKTOP.

Software Selection:

OpenOffice.org-க்கு பதிலாக Libre Office.
Rhythmbox audio player-க்கு பதிலாக Banshee audio player.
F-Spot-க்கு பதிலாக gThumb

DESKTOP SELECTION:

GNOME,KDE,XFCE...ect...திங்கள், மே 02, 2011

உபுண்டுவில் YOUTUBE VIDEO-வினை எளிதில் தரவிறக்கம் செய்ய...


புண்டுவில் YOUTUBE VIDEO-வினை தரவிறக்கம் செய்ய tmp folder முன்னர் உதவியாக இருந்தது ஆனால் இதற்கு VIDEO முழுவதும் STREAM ஆக வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு தரவிறக்கம் செய்ய இயலாது காரணம் flash player update ஆகும். இதனால்  எனக்கு  YOUTUBE VIDEO-வினை தரவிறக்கம் செய்வது மிகவும் கடினமாக  இருந்தது, எனவே நான் இந்த சிக்கலை எவ்வாறு சரி செய்வது என்ற முயற்சியில் ஈடுபட்டேன். அதற்கான தீர்வினையும் கண்டுபிடித்தேன்.
அது என்னவென்றால் MOZILLA நெருப்பு நரி உலாவியில் உள்ள Easy YouTube Video Down loader என்னும் ADD ON ஆகும்.

இதனை எவ்வாறு நிறுவுவது?
    
    Mozilla firefox -இல்  ADD ON MANAGER சென்று YOUTUBE என SEARCH செய்து Easy YouTube Video Down loader-ஐ நிறுவிக்கொண்டு mozilla firefox-ஐ மறுதுவக்கம் செய்யவேண்டும்.இப்போது YOUTUBE சென்று பாருங்கள் VIDEO-விற்கு கீழே DOWNLOAD என்ற BUTTON  தெரியும்,அந்த BUTTON-னை CLICK செய்தால் MP4, FLV போன்ற பல FORMAT தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான FORMAT-ஐ SELECT செய்தால் போதும் YOUTUBE VIDEO DOWNLOAD ஆகிவிடும்.
சந்தேகதிற்குகீழுள்ள SCREEN SHOT-னை பார்க்கவும்...
    
FIG.1
FIG.2

FIG.3FIG.4

வியாழன், ஏப்ரல் 28, 2011

உபுண்டு 11.04 பதிப்பு (NATTY NARWHAL) இன்று (28/04/2011) வெளியிடபட்டுவிட்டது...


புண்டு 11.04 NATTY  NARWHAL இன்று (28/04/2011)வெளியிடபட்டு உள்ளது.இது உபுண்டு லினக்ஸ்-இன் 11-வது பதிப்பு ஆகும்.அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் நிறுவினேன் மிகவும் அருமையாக உள்ளது. தரவிறக்க சுட்டி கீழே தரபட்டுள்ளது.

புண்டு 11.04 NATTY  NARWHAL இயங்கு தளத்தில் இருந்து எனது வலைப்பூவை பார்வையிட்ட பொழுது


இன்டெர்நெட் மிகவும் விரைவாக செயல்படுகிறது. Visual Effect இதில் கொடுக்க படவில்லை,  RHYTHMBOX AUDIO PLAYER இங்கு BANSHEE .நெருப்பு நரி 4.0 தரப்பட்டுள்ளது. WIRELESS DRIVER  10.10 போல நாமே நிறுவிக்கொள்ள வேண்டும்.மேலும் இதில் NETBOOK EDITION போல இடது ஓரத்தில் 2D UNITY LAUNCHER BAR  கொடுக்க பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் GNOME PANEL இல்லாததால்  சில நேரம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது,  கீழ்கண்ட CODE -னை TERMINAL -இல் கொடுத்தால் GNOME  PANEL மேலும் கீழும் வந்துவிடும் . அப்போது எளிதாக இருக்கும்.

sudo debconf gnome-panel    


உபுண்டு 11.04 தரவிறக்க சுட்டி:வெள்ளி, மார்ச் 11, 2011

உபுண்டுவில் மிகவும் தேவையான ஒன்று: How to restore gnome-desktop-panel as Default | உபுண்டுவில் Gnome-Desktop-Panels-னை இயல்பான நிலைக்கு கொண்டு வருவது எப்படி?

நாம் நமது உபுண்டுவில் பேனலில் WIRELESS,SOUND PREFERENCE போன்ற  ICON-களில் RIGHT CLICK செய்து REMOVE FROM PANEL என்று கொடுத்துவிடுவொம் அதில் சிலவற்றை மட்டுமே ADD TO PANEL என்ற  OPTION  மூலம் மீண்டும் கொண்டு வர இயலும் சிலவற்றை கொண்டு வர இயலாது இதனை எவ்வாரு சரி செய்வது?
Gnome panel-ஐ restore செய்வதன் மூலம் இதனை  சரி செய்யலாம்.
 
1.GNOME PANEL RESTORE:
   
முதலில் Applications->Accessories->Terminal செல்லவும் பின்னர் கீழ்வரும் command-னை   Type செய்யவும்.

gconftool –recursive-unset /apps/panel 

rm -rf ~/.gconf/apps/panel

pkill gnome-panel  

ல்து 

 Applications->Accessories->Terminal சென்று பின்வரும் command-னை type செய்யவும் .

 sudo debconf gnome-panel

அவ்வளவுதான் உங்கள்  உபுண்டு Desktop-panel-restore ஆகிவிடும்.  

2.GNOME DESKTOP RESTORE:

 1. PRESS (Go to console mode) Ctrl+alt+f1
 2. login
 3. type metacity --replace
 4. Then press ctrl+alt+f7 (back to GUI )
 
 
 

சனி, மார்ச் 05, 2011

இணையத்தில் திருக்குறள் படிக்க...

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
இதனை இணையத்தில் படிக்கலாம்,இந்த தளத்தில் சென்று குறளின் ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடினால் குறள்,குறளுக்கான விளக்கம்,குறள் எண்,குறள் அதிகாரம் போன்றவை அழகாக கிடைக்கும்.
இணையதள முகவரி: http://kural.muthu.org/kural.php MyFreeCopyright.com Registered & Protected

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

உபுண்டு-வில் விண்டோஸ் பட்டனை எவ்வாறு உபுண்டு start menu பட்டனாக பயன்படுத்துவது(மாற்றுவது) ?

KEYDOWS TO UBUNTU MENU KEY
விண்டோஸ் இயங்கு தளத்தில் START MENU BUTTON- அழுத்தினால் START MENU தோன்றும், ஆனால் உபுண்டுவில் WINDOWS KEY- அழுத்தினால் எந்த மாற்றமும் இருக்காது நாம் உபுண்டுவில் menu செல்ல ஒவ்வொரு முறையும் APPLICATION >PLACES > SYSTEM-க்கு MOUSE மூலம்தான் செல்ல வேண்டும்.

WINDOWS KEY BOARD

WINDOWS KEY- எவ்வாறு UBUNTU START MENU BUTTON-ஆக மாற்றுவது? பின்வரும் கட்டளையை முனையத்தில் கொடுப்பதன் மூலம் உபுண்டுவில் START MENU BUTTON- அமைக்கலாம்.

gconftool-2 --set /apps/metacity/global_keybindings/panel_main_menu --type string "Super_L"


LINUX UBUNTU KEY BOARD


LINUX UBUNTU KEY BOARD
இனி நீங்கள் விண்டோஸ் பட்டனை அழுத்தினால் உபுண்டுவில் MENU தோன்றும். ESC பட்டனை அழுத்தினால் MENU மறையும்.

திங்கள், பிப்ரவரி 07, 2011

உபுண்டுவில் Desktop Wallpaper-கள் தானாக மாறிக்கொள்ள!!!

Windows 7-இயங்குதளத்தில் அடுத்தடுத்த desktop wallpaper-கள் குறிப்பிட்ட வினாடிகளில் தானாகவே மாறிக்கொள்ளும் அதுபோல் நமது உபுண்டு இயங்குதளதில் செய்யமுடியாதா என்ன?
இந்த பதிவில் உபுண்டுவில் wallpaper-கள் தானாக மாறும்படி செய்வது எப்படி என்று பார்ப்போம், wally என்னும் நிரலை உபுண்டு இயங்குதளத்தில் நிறுவுவது மூலம் இதனை செய்யலாம்,இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
wally-யை நிறுவ terminal-இல் பின்வரும் code-னை கொடுக்கவும்.
sudo apt-get install wally


படம்.1
அல்லது ubuntu software center சென்று wally என search செய்தும் நிறுவிக்கொள்ளலாம். பின்னர் Alt+f2-வை அழுத்தி அதில் wally என type செய்து run செய்யவும்.

படம்.2இப்போது wally பேனலின் வலது மேல்புறத்தில் run ஆவதை காணலாம்.

படம்.3

படம்.4


அந்த icon-இல் வலது சொடுக்கி settings சென்று உங்களின் விருப்பமான folder மற்றும் time போன்றவற்றை உங்களுக்கு விருப்பமானவாறு மாற்றிக்கொள்ளுங்கள். (நீங்கள் select செய்யும் folder home directory-இல் இருக்க வேண்டும்) wally நாம் கணினியை ON மற்றும் OFF செய்யும் போது தானாக இயங்காது எனவே wally-யை startup application சென்று wally-யை add செய்து startup -இல் கொண்டுவரவேண்டும்.
படம்.5
படம்.6
படம்.7
அவ்வளவுதான்.

திங்கள், ஜனவரி 31, 2011

உபுண்டு-வில் டெஸ்க்டாப் கடிகாரம் கொண்டு வருவது எப்படி?


புண்டு -வில் desktop -ல் கடிகாரம் கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் UBUNTU SOFTWARE CENTRE சென்று clock என்று search செய்யவும்.


இதில் macslow's cairo-clock-ஐ நிருவிக்கொள்ளவும்.

பின்னர் accessories சென்று macslow's cairo-clock-ஐ open செய்து உங்களுக்கு விருப்பமான style-இல் வைத்துக்கொள்ளவும்.


இப்பொது உங்கள் உபுண்டு desktop-இல் கடிகாரம் வ்ந்து இருப்பதை காணலாம்.


திங்கள், ஜனவரி 24, 2011

லினக்ஸின் புதிய இயங்குதளம் -LINUX XP 10.10
கீழேயுள்ள படத்தை பாருங்கள் ஆச்சர்யமாக உள்ளதா!!!


படம்.1

து windows-ஆ linux-ஆ னு குழப்பமாக உள்ளதா? இது நமது லினக்ஸின் படைப்புதான் xp (REMIX UBUNTU) இயங்குதளம் போலவே இருக்கும் ஆனால் இது xp அல்ல LINUX XP 10.10.

இதில் விண்டோசில் உள்ளது போலவே icon,startmenu மற்றும் folder-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இது பார்ப்பதற்கு windows போன்று இருந்தாலும் பய்னபடுத்துவதற்கு linux உபுண்டு போலதான் இருக்கும்.
நான் இதனை தரவிறக்கம் செய்து USB STARTUP DISC CREATOR மூலம் USB -ல் நிறுவி LIVE USE செய்து பர்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது.

download link: LINUX XP 10.10


PROPERTIES:

 • FILE SIZE 758.4 MB
 • VISUAL EFFECT GOOD
 • NO INSIDE INSTALLATION

மேலும் சில SCREENSHOT-கள் கீழே,
படம்.2
படம்.3
படம்.4படம்.5
படம்.6

படம்.7

வியாழன், ஜனவரி 06, 2011

Compaq 515 மாடல் மடிக்கணினியில் Pinguy Os 10.10 இயங்குதளத்தில் Broadcom Wireless(Wi5)-யினை Enable செய்வது எப்படி?

சென்ற பதிவில் PINGUY OS பற்றி பார்த்தோம் ஆனால் அதில் Wi5 connect செய்வது சிக்கலாக இருத்தது, இதனை தீர்பதற்காக PINGUY OS Forum-இல் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன் அதற்க்கு சரியான விடையும் ஒரு இணைய முகவரி ஒன்றும் தந்து இருந்தனர் உடனே அதனை சொடுக்கி பார்த்தேன் அது வேறு ஒன்றும் இல்லை தோழர் கதிர்வேல் அவர்கள் ஏற்கனவே நமக்கு கூறிய முகவரிதான் அது பின்வருமாறு,

http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware

இங்கு அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களிலும் WI5 CONNECT செய்வது எப்படி என்று அருமையான விளக்கம் மிகவும் எளிதாக தரபட்டு இருந்தது.இதன் மூலம் நமக்கு தேவையான மென்பொருள்களை லினக்ஸ் மிண்ட் 10-இல் உள்ள இணைய இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

எனது compaq 515 Model மடிக்கணினியில் உள்ள Wi5 Hardware-இன் விபரம்:

06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).

கணினியினுடைய WiFi Hardware விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை Terminal-இல் கொடுக்கவும்.

எனது மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் தேவையான பொதிகளின்(Packages) பெயர் பின்வருமாறு,
 1. b43-fwcutter-013.tar.bz2
 2. broadcom-wl-4.150.10.5.tar.bz2
இந்த இரண்டு பொதிகளையும் மேற்கண்ட முகவரியில் இருந்தே தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

வழிமுறைகள்:
  • இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, bbroadcom-wl-4.150.10.5.tar.bz2 இரண்டு கோப்புகளையும் copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
   • முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ Terminal-இல் பின்பவரும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
    tar xjf b43-fwcutter-013.tar.bz2
    cd b43-fwcutter-013
    make
    cd ..

    படம்.1-b43-fwcutter-013.tar.bz2 முனையம் மூலம் நிறுவும்போது
    அடுத்ததாக பின்வரும் கட்டளையை Terminal- ‍இல் கொடுக்கவும்.

    export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"

    படம்.2-firmware in terminal
    • அடுத்ததாக நாம் நிறுவ வேண்டிய Package broadcom-wl-4.150.10.5.tar.bz2 ஆகும், இதனை நிறுவ கீழ்வரும் கட்டளைகளை வரிசையாக Terminal இல் கொடுக்கவும்.

    tar xjf broadcom-wl-4.150.10.5.tar.bz2

    cd broadcom-wl-4.150.10.5/driver

    sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta_mimo.o

    படம்.3 broadcom-wl-4.150.10.5.tar.bz2 நிறுவும்போது

    படம்.4-WI5 CONNECT ஆகிய போது
    படம்.5-WI5 AUTHENTICATION செய்த போது

    படம்.6.0-wi5 connection establish ஆகியபோது

    படம்.6.1-wi5 connection establish ஆகியபோது

    அவ்வளவுதான் எனது மடிக்கணினியில் pinguy os 10.10 இயங்குதளத்தில் Wi5 connect ஆகியது..

    படம்.7-wi5 connect ஆகியவுடன் இணையத்தில் என்னுடைய வலைப்பூவை பார்த்தபொழுது


    குறிப்பு:
    இதனை PEN-DRIVE-இல் இருந்த படியே LIVE SESSION-இல் செய்தேன்.