வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

உலகே வியந்து பார்க்கும் தமிழனின் உலக சாதனை...


ளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தாலும் அது சுற்றுச்சூழலை பாதிக்கும் அல்லது அதிக செலவுடையதாக இருக்கும் இந்த நிலையில் ஒரு (இந்தியன்) தமிழன் உலகமே வியக்கும் படி சுற்றுச்சூழலுக்கும் பதிப்பு ஏற்படாத விதத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் ஒரு தமிழர்.



Bloom Box  - K.R. Sridhar
இவரின் புகைப்படத்தைக்காண இங்கு சொடுக்கவும்.
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம்இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்..டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமாஅதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவதுஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பிஅதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அடஎன்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திவர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர்ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்அமேசான்கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம்ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால்,ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம்ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போதுசுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரிஅனல் மின் உற்பத்தியாகஇருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிரஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்தபாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாகஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம் அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால்அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில்கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கிஇருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலாஅடோப் சிஸ்டம்சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.

100 
கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை முதல் லட்சம் டாலர்! அடஅவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமாஎன நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bayநிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல  வீடுகளில்  இந்த 'ப்ளூம் பாக்ஸ்இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்''என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால்ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர்இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

லினக்ஸில் PROGRAM BACKUP (APTON CD) எடுப்பது எப்படி?


லினக்ஸ்-இல் backup என்பது நாம் லினக்ஸ்-இல் மென்பொருள்கள் இலவசம் தானே! ஆனால் இதனை நாம் பயன்படுத்த இணைய இணைப்பு தேவை நம்மிடம் இணைய இணைப்பு இல்லை என்றாலோ அல்லது நம்முடய லினக்ஸ்-இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ மீண்டும் நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது ? லினக்ஸ் ஒரு இலவச இயங்குதளம் நாம் எப்போது வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளலாம் நீக்கி கொள்ளலாம் WINDOWS போன்று இல்லை லினக்ஸ் இது போன்ற சமயத்தில் லினுக்ஸை நாம் மீண்டும் நிறுவுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் எந்த ஒரு மென்பொருளும் நம் இயங்கு தளத்தில் இருக்காது. இப்போதுதான் நாம் APTONCD மிகவும் பயன்படும் .அதனை பற்றி இப்போது பார்ப்போம்.
APTONCD-ஐ நிறுவவும் இணையை இணைப்பு தேவை இவ்வாறு நாம் லினக்ஸில் நிறுவிய மென்பொருள்களை BACKUP எடுத்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் APTONCD-ஐ மட்டும் இணயை உதவியால் நிறுவிக்கொண்டு மற்ற மென்பொருள்களை BACKUP மூலம் நிறுவிக்கொள்ளலாம் நேரம் மற்றும் வேலை மிச்சம் அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம் UBUNTU SOFTWARE CENTER-இல் சென்று APTONCD என்று SEARCH செய்து நிறுவிக்கொள்ளலாம். சந்தேகதிற்கு என்னுடய முந்தய பதிவை (லினக்ஸில் OR மிண்டில் மென்பொருள்களை நிறுவது எப்படி?) பார்க்கவும்.

இப்போது APTONCD-ஐ கையாளுவது எப்படி என்று பார்ப்போம் .
முதலில் SYSTEM --> ADMINISTRATION-->APTONCD-ஐ தெரிவு செய்யவும் ,இப்போது பின்வரும் திரை உங்களுக்கு கிடைக்கும்.

படம்.1

படம்.2



இதில் CREATE என்ற OPTION-ஐ தெரிவு செய்யவும்.பின் வரும் திரையில்உங்களுக்கு தேவயான மென்பொருள்களை SELECT செய்து BURN என்ற பொத்தானை அழுத்தவும்.
படம்.3

படம்.4


இப்போது Installation disc properties என்று ஒரு திரை காண்பிக்கப்படும் இதில் உங்களின் மென்பொருளின் அளவு பொறுத்து cd அல்லது dvd என்றதை தெரிவு செய்யவும் உங்களின் iso file-இன் அளவு 700 mb-யை விட அதுக்கமாக இருந்தால் dvd-ஐ select செய்து apply கொடுங்கள். இப்போது உங்களுக்கு பின்வரும் திரையில் image file create ஆகும்.
படம்.5


இதில் உங்களின் மென்பொருள்கள் iso file-ஆக மாற்றப்படும்.நீங்கள் இதனை
cd -ஆக மாற்றவிரும்பினால் பின் வரும் திரையில் YES என்ற பொத்தானை அழுத்தி cd அல்லது dvd-ஐ உள்ளீடு செய்து create image என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்களின் backup cd தயாராகி வந்துவிடும்.


படம்.6

படம்.7

இந்த iso - file-ஐ உங்களின் புதிய இயங்கு தளத்தில்- restore - செய்ய மீண்டும்
SYSTEM --> ADMINISTRATION-->APTONCD-ஐ தெரிவு செய்து restore என்ற option-ஐ தெரிவுசெய்யுங்கள் இப்போது உங்களுக்கு பின் வரும் திரைகள் தோன்றும்.


படம்.8

படம்.9

படம் .10

படம்.11

படம்12.

இதில் load என்பதை தெரிவு செய்து உங்களின் backup file cd அல்லது dvd-இல் இருந்தால் restore apooncd என்ற திரையில் cd or dvd என்ற option -ஐ தெரிவு செய்து ok பொத்தானை அழுத்துங்கள், உங்களின் backup file வந்தட்டில் இருந்தால் iso image என்ற option-ஐ தெரிவு செய்து உங்களின் iso image file-ஐ select செய்து ok பொத்தானை அழுத்துங்கள். அவ்ளோதான் உங்களின் இயங்குதளத்தில் உங்களின் மென்பொருள்கள் அனைத்தும் நிறுவபட்டுவிடும்.
குறிப்பு: நீங்கள் aptoncd எந்த இயங்கு தளத்தில் எடுத்தீர்களோ அந்த இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். உபுண்டு இயங்கு தளத்தில் create செய்யபட்ட Aptoncd-ஐ உபுண்டு இயங்கு தளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.






புதன், அக்டோபர் 13, 2010

Opera 10.10- யை உபுண்டு 10 .10 -இல் நிறுவுவது எப்படி?











Opera 10 .10  Ubuntu software Center-இல் Add செய்யப்படவில்லை   அதனை  நமது உபுண்டு இயங்கு தளத்தில்  நிறுவுவது எப்படி என்று  பார்ப்போம்.

முதலில்  Opera  Package -யை தரவிறக்கம் செய்ய இங்கு  சொடுக்கவும், இந்த   Package-ன்     14.1 MB அளவு இருக்கும். இப்போது நமக்கு ஒபேரா 10 .10 Ready இதனை  நமது உபுண்டு இயங்கு தளத்தில் நிறுவ அந்த Package -யை Right Click செய்து Open With Ubuntu Software Center மூலம் நிறுவிக்கொள்ளலாம். அல்லது டெர்மினலில் பின்வரும் Code Type செய்வதன் மூலம் நிறுவலாம்.


sudo dpkg -i opera_10.10.4742.gcc4.qt3_i386.deb 

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

Ubuntu 10.10 (Maverick Meerkat) Released‎ (10/10/2010)1Today...








     10.10 released


ubuntu 10.10 maverick meerkat இன்று வெளியிடபட்டது அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் நிறுவினேன் மிகவும் அருமையாக உள்ளது இன்டெர்நெட் மிகவும் விரைவாக செயல்படுகிறது. Visual Effect நன்றாக செயல்படுகிறது. UBUNTU SOFTWARE CENTER-ல் மென்பொருள்களின் தொகுப்பு மிக அழகாக தரப்பட்டுள்ளது.இந்த உபுண்டு மவெரிக் மீர்கட் லினக்ஷ் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்புகிறேன்.இதன் மூலம் லினக்ஷ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பர்க்கிறேன்.  LINUX UBUNTU 10.10  மவெரிக் மீர்கட்  என்னை போன்ற‌ LINUX பிரியர்களுக்கு வரபிரசாதம். 



வெள்ளி, அக்டோபர் 08, 2010

லினக்ஸ் இல் விண்டோஸ்!!! (LINUX IS NOW WINDOWS )




லினக்ஸ் இப்போது விண்டோஸ் என்னங்க புரியலயா? சரி கீழே உள்ள படத்தை பாருங்கள்!!!

படம்.1
என்னங்க இன்னும் புரியலையா? இல்ல ஆச்சர்யமாக இருக்காஆமாங்க இப்போ நம்ம லினக்ஸ் புதிய பதிப்பு உபுண்டு 10.10-ல WINDOWS - INSTALL செய்யக்கூடிய  பல (EXE) மென்பொருள்களை நிறுவலாம்.படம்.1- பாருங்கள் இது என்னுடய மடிக்கணியில் எடுக்கப்பட்ட SCREENSHOT.
Adobe Photoshop, Google Talk, Google Desktop, Power ISO, Total Video Converter, Winamp மற்றும் பல  மென்பொருள்களை நிறுவலாம்.
இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்!!! படித்துவிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.படம்.2-ஐ பாருங்கள்.
படம்.2
UBUNTU SOFTWARE CENTER-இல் சென்று படம்.2-இல் காட்டபட்டது போல் Wine என்று SEARCH செய்து Wine Microsoft Windows Compatibility Layer-Install செய்து கொள்ளுங்கள்.இப்போது Application-இல் accessories, Game என்ற வரிசையில் Wine என்ற புதிய OPTION இருக்கும்.இதில் நாம் INSTALL செய்யும் மென்பொருள்கள் WINE--.PROGRAME-இல் (படம்.3) இருக்கும்.


படம்.3


EXE File-ஐ நிறுவது எப்படி என்று பார்ப்போம்.WInamp PLAYER EXE File-ஐ INSTALL செய்ய (படம்.4) exe File-Right Click செய்து OPEN Wine WITH WINDOWS Program Loader என்று கொடுக்கவும் இனி Windows-இல் Program Install செய்வது போல அனைத்தையும் நிறுவி பயன்படுத்தலாம்.

படம்.4

படம்.5


படம்.6


படம்.7

இப்போது லினக்ஸ்-இல் Winamp Player Ready.  இப்போது சொல்லுங்கள் 
லினக்ஸ் IS NOW விண்டோஸ் தானே!!!