வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

வியாழன், ஜனவரி 06, 2011

Compaq 515 மாடல் மடிக்கணினியில் Pinguy Os 10.10 இயங்குதளத்தில் Broadcom Wireless(Wi5)-யினை Enable செய்வது எப்படி?

சென்ற பதிவில் PINGUY OS பற்றி பார்த்தோம் ஆனால் அதில் Wi5 connect செய்வது சிக்கலாக இருத்தது, இதனை தீர்பதற்காக PINGUY OS Forum-இல் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன் அதற்க்கு சரியான விடையும் ஒரு இணைய முகவரி ஒன்றும் தந்து இருந்தனர் உடனே அதனை சொடுக்கி பார்த்தேன் அது வேறு ஒன்றும் இல்லை தோழர் கதிர்வேல் அவர்கள் ஏற்கனவே நமக்கு கூறிய முகவரிதான் அது பின்வருமாறு,

http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware

இங்கு அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களிலும் WI5 CONNECT செய்வது எப்படி என்று அருமையான விளக்கம் மிகவும் எளிதாக தரபட்டு இருந்தது.இதன் மூலம் நமக்கு தேவையான மென்பொருள்களை லினக்ஸ் மிண்ட் 10-இல் உள்ள இணைய இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

எனது compaq 515 Model மடிக்கணினியில் உள்ள Wi5 Hardware-இன் விபரம்:

06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).

கணினியினுடைய WiFi Hardware விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை Terminal-இல் கொடுக்கவும்.

எனது மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் தேவையான பொதிகளின்(Packages) பெயர் பின்வருமாறு,
  1. b43-fwcutter-013.tar.bz2
  2. broadcom-wl-4.150.10.5.tar.bz2
இந்த இரண்டு பொதிகளையும் மேற்கண்ட முகவரியில் இருந்தே தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

வழிமுறைகள்:
    • இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, bbroadcom-wl-4.150.10.5.tar.bz2 இரண்டு கோப்புகளையும் copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
      • முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ Terminal-இல் பின்பவரும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
        tar xjf b43-fwcutter-013.tar.bz2
        cd b43-fwcutter-013
        make
        cd ..

        படம்.1-b43-fwcutter-013.tar.bz2 முனையம் மூலம் நிறுவும்போது
        அடுத்ததாக பின்வரும் கட்டளையை Terminal- ‍இல் கொடுக்கவும்.

        export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"

        படம்.2-firmware in terminal
        • அடுத்ததாக நாம் நிறுவ வேண்டிய Package broadcom-wl-4.150.10.5.tar.bz2 ஆகும், இதனை நிறுவ கீழ்வரும் கட்டளைகளை வரிசையாக Terminal இல் கொடுக்கவும்.

        tar xjf broadcom-wl-4.150.10.5.tar.bz2

        cd broadcom-wl-4.150.10.5/driver

        sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta_mimo.o

        படம்.3 broadcom-wl-4.150.10.5.tar.bz2 நிறுவும்போது

        படம்.4-WI5 CONNECT ஆகிய போது
        படம்.5-WI5 AUTHENTICATION செய்த போது

        படம்.6.0-wi5 connection establish ஆகியபோது

        படம்.6.1-wi5 connection establish ஆகியபோது

        அவ்வளவுதான் எனது மடிக்கணினியில் pinguy os 10.10 இயங்குதளத்தில் Wi5 connect ஆகியது..

        படம்.7-wi5 connect ஆகியவுடன் இணையத்தில் என்னுடைய வலைப்பூவை பார்த்தபொழுது


        குறிப்பு:
        இதனை PEN-DRIVE-இல் இருந்த படியே LIVE SESSION-இல் செய்தேன்.









        4 கருத்துகள்:

        பெயரில்லா சொன்னது…

        பின்கய் இயங்குதளத்தைப்பற்றி அனைவருக்கும் கலங்கரைவிளக்கமாக திகழும் உங்களுக்கு நன்றி.

        பெயரில்லா சொன்னது…

        //wi5 connection establish ஆகியபோது//

        வட்டம் போட்டும் படிக்க முடியவில்லை. அதை மட்டும் பெரிதுபடுத்து போட்டு இருக்கலாம்.

        சரவணன்.D சொன்னது…

        //ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது...பின்கய் இயங்குதளத்தைப்பற்றி அனைவருக்கும் கலங்கரைவிளக்கமாக திகழும் உங்களுக்கு நன்றி.//
        நன்றி திரு.பிரபு சார்.
        //கலங்கரைவிளக்கமாக//
        எல்லாம் தங்களின் ஊக்கமும் விளக்கமும் தான் முக்கிய காரணம் சார்.

        சரவணன்.D சொன்னது…

        //ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது...
        //wi5 connection establish ஆகியபோது//
        வட்டம் போட்டும் படிக்க முடியவில்லை. அதை மட்டும் பெரிதுபடுத்து போட்டு இருக்கலாம்.//
        இதோ இப்போதே மாற்றிவிடுகிறேன் சார்.